ஏலக்காய் ஏற்றுமதி புதிய உச்சம் விலை உயர வாய்ப்பு அதிகரிப்பு
கம்பம்: இந்திய ஏலக்காய் ஏற்றுமதியில் புதிய உச்சம் தொட்டுள்ளது. இதனால் உள்ளூர் விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக ஏலக்காய் வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஏலக்காய் சாகுபடியில் கேரளா 70 சதவீத உற்பத்தியை பகிர்ந்து கொள்கிறது. கேரளாவில் இடுக்கி, வயநாடு, பாலக்காடு மாவட்டங்களில் ஏலக்காய் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் சாகுபடியாகிறது. சர்வதேச மார்க்கெட்டில் இந்திய ஏலக்காய்க்கு எப்போதும் கிராக்கி உள்ளது. இதற்கு காரணம் சைஸ், கலர், குணம் பிற நாட்டு ஏலக்காய்களை விட நன்றாக இருக்கும்.
2023 -- 24ல் 7083 டன்னாக இருந்த ஏலக்காய் ஏற்றுமதி, 2025 -- 26ல் 16,399 டன்னாக உயர்ந்துள்ளது. குறிப்பாக




