5 மாநில சட்டசபை தேர்தல்: பா.ஜ.க.வுக்கு இவ்வளவு கோடி கட்சி நிதியா..?
புதுடெல்லி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்கள் நடைபெற்ற காலகட்டத்தில் பா.ஜ.க.வின் மத்திய தலைமையகத்துக்
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்கள் நடைபெற்ற காலகட்டத்தில் பா.ஜ.க.வின் மத்திய தலைமையகத்துக்கு ரூ.1,472.8 கோடி கட்சி நிதி வரவாக கிடைத்துள்ளது.
அதேநேரத்தில், அசாம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேர்தல்களுக்கு பா.ஜ.க. மத்திய தலைமையகம், மாநில மற்றும் மாவட்ட அமைப்புகள் மூலம் மொத்தம் ரூ.160 கோடி மட்டுமே செலவிட்டுள்ளதாக தேர்தல் செலவு கணக்குகள் மூலம் தெரிய வந்துள்ளது. மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவுக்கான செலவு விவரங்கள் இன்னும் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசந்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களின் போது பா.ஜ.க. தலைமையகத்துக்கு மொத்தம் ரூ.1,472.8 கோடிகட்சி நிதியாக கிடைத்துள்ளது. 5 மாநில தேர்தல்களின் போது பா.ஜ.க.வின் கணக்கில் இருப்பு ரூ.7,627.2 கோடியாக உயர்ந்தது. 2026 மார்ச் 15 ந்தேதி இருப்பு ரூ.6,722.6 கோடியாக இருந்த நிலையில், தேர்தல்காலகட்டத்துக்குப் பிறகு ரூ.904.6 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது.




