காவலர் குடியிருப்பில் குடிநீர் தட்டுப்பாடு ஓராண்டாகியும் தீர்க்கப்படாததால் அவதி
திருப்போரூர், செப். 9– திருப்போரூரில் உள்ள காவலர் குடியிருப்பில், ஒராண்டாகியும் குடிநீர் பிரச்னை
திருப்போரூரில் உள்ள காவலர் குடியிருப்பில், ஒராண்டாகியும் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படாததால், போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சி ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி, காவலர் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளில் 70க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இந்த குடியிருப்பில் ஓராண்டாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், அங்கு வசித்து வரும் போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் சிரமப்பட்டு வருகின்றனர்.
