ஜீப் கவிழ்ந்து 2 பேர் பலி
கருமத்தம்பட்டி: கோவை அருகே, குளத்தில் ஜீப் கவிழ்ந்ததில், பத்மநாபன், 56, சென்னியப்பன், 65, ஆகியோர் உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம், 63 வேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன். குவாரி உரிமையாளர். இவரது நிறுவனத்தின் கணக்காளர் சென்னியப்பன்.
இருவரும், நேற்று முன்தினம் இரவு, தொழில் நிமித்தமாக, கோவை மாவட்டம், செம்மாண்டாம்பாளையம் புதுாருக்கு ஜீப்பில் சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இதில், கட்டுப்பாட்டை இழந்த ஜீப், குளத்துக்குள் கவிழ்ந்ததில், பத்மநாபன், சென்னியப்பன், குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.


