தென்தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவுமா விழிஞ்ஞம் துறைமுகம்?
ஒரு துறைமுகம் வளர்ந்தால் அதைச் சுற்றி கிடங்குகள், லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள், உற்பத்தி ஆலைகள் உருவாவது உலகளாவிய நடைமுறை.
சென்னையை மையமாகக் கொண்டே தமிழகத்தின் பெரும்பான்மை தொழில் செயல்பாடுகள் இருக்கும் சூழலில், தென் தமிழகத்தில் ஒரு புதிய தொழில் அத்தியாயம் தொடங்குவதற் கான வாய்ப்பை உருவாக்கி உள்ளது கேரளாவின் விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம்!
திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ள விழிஞ்ஞம் துறைமுகத்தை பிரதமர் மோடி கடந்த 2025 மே மாதம் திறந்து வைத்தார். கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் முழுமையான ஏற்றுமதி–இறக்குமதி செயல்பாடுகள் தொடங்கி உள்ளன. செப்டம்பர் 1-ம் தேதி ‘MSC Beryl’ என்ற கப்பல் கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பெயினின் Valencia நோக்கிப் புறப்பட்டது. இது இந்தத் துறைமுகத்தின் சர்வதேசப் பயணத்துக் கான முக்கியத் தொடக்கம்.
“இந்தியாவிலேயே ஐரோப்பா, அமெரிக்க நாடுகளுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து சேவை வழங்கும் ஒரே ஆழ்கடல் சர்வதேச டிரான்ஸ்ஷிப் மென்ட் துறைமுகம் விழிஞ்ஞம்” என்கிறார், விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தின் சி.இ.ஓ பிரதீப் ஜெயராமன்.






