அ.தி.மு.க., ஆட்சியில் அப்துல்கலாம் நினைவிடத்திற்கு 2 ஏக்கர் ஒதுக்கீடு: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பேச்சு
முதுகுளத்துார்: ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் அமைப்பதற்கு அ.தி.மு.க., ஆட்சியில் இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று முதுகுளத்துாரில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி பேசினார்.
முதுகுளத்துாரில் எம்.பி., தர்மர் இல்ல திருமண விழாவில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி தலைமையேற்று நடத்தி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
திருமண விழாவில் நான் அரசியல் பேசுவதை தவிர்த்து விடுவேன். சில அரசியல் கட்சித் தலைவர்கள் திருமண நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொண்டு மணமக்களை வாழ்த்தியதோடு அவர்களுடைய நிலைப்பாட்டையும் எடுத்துச் சொல்லி விடுகிறார்கள். அ.தி.மு.க., ஆட்சியில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.


