டில்லி செங்கோட்டை சம்பவம் தற்கொலைப்படை தாக்குதலே குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ., உறுதி
புதுடில்லி: 'டில்லி செங்கோட்டை அருகே கடந்தாண்டு நவம்பரில் நடந்த கார் வெடிகுண்டு சம்பவம் தற்கொலைப் படை தாக்குதல்' என, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் குற்றப்பத்திரிகையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நவ., 10ல், டில்லி செங்கோட்டை அருகே போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. காரை ஓட்டிய, ஜம்மு - காஷ்மீர் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபி உட்பட 11 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் என்.ஐ.ஏ., இது பயங்கரவாத தாக்குதல் என உறுதி செய்தது.
இந்த விவகாரத்தில், ஹரியானாவின் அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றிய மூன்று டாக்டர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக, குற்றஞ்சாட்டப்பட்ட 13 பேருக்கு எதிராக, 4,500 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ., கடந்த மாத இறுதியில் தாக்கல் செய்தது. அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:




