பாரத ரத்னா பெற்ற 92 வயது விஞ்ஞானிக்கு எஸ்.ஐ.ஆர். நோட்டீஸ்! வினோதமான கேள்வி!
பாரத ரத்னா பெற்ற 92 வயது விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கு எஸ்.ஐ.ஆர். நோட்டீஸ் பற்றி...
கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பட்டியலில் பெயர் தொடர்பான முரண்பாடு குறித்து விளக்கமளிக்க பாரத ரத்னா விருது பெற்ற 92 வயது விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெறுகின்றன. கடந்த ஆகஸ்ட் 17 அன்று வாக்காளர் வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் அக். 19 அன்று வெளியிடப்படவுள்ளன.


