குறைதீர் முகாம்
மதுரை: மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகம் 2க்கு உட்பட்ட வார்டுகளுக்கான மக்கள் குறைதீர் முகாம் துணைமேயர் நாகராஜன் தலைமையில் நடந்தது.
துணை கமிஷனர் ராஜாராம் முன்னிலை வகித்தார். சொத்துவரி பெயர் மாற்றம், காலிமனை வரிவிதிப்பு, புதிய குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்பு, ஆக்கிரமிப்பு அகற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 69 மனுக்கள் வரப்பெற்றன. சில மனுக்களுக்கு உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உதவி கமிஷனர் தமிழரசன், நிர்வாக அலுவலர் அகமது இப்ராஹிம், உதவி வருவாய் அலுவலர் ஆனந்தம், பி.ஆர்.ஓ., விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

