பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு, எஸ்.பி., மதிவாணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். இதில், நிலம் அபகரிப்பு, பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்னை உட்பட மாவட்டம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் வந்தது.
இந்த மனுக்கள் மீது அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் விசாரணை செய்து விரைவாக தீர்வு காணுவதற்கான நடவடிக்கை எடுக்க எஸ்.பி., உத்தரவிட்டார்.