கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாப பலி
காசிமேடு: காசிமேடு பகுதியில், கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக பலியானார்.
காசிமேடு, சிங்காரவேலர் நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கதிரவன், 53; மீனவர். நேற்று முன்தினம், மீன்பிடி தொழிலுக்காக, துறைமுகத்தின் புதிய வார்ப்பு பகுதிக்கு சென்றார். அப்போது, திடீரென கதிரவன் கால் தவறி கடலில் விழுந்தார்.
கடலில் மிதந்து கொண்டிருந்த கதிரவன் உடலை, மீன்பிடி துறைமுக போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


