கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாப பலி
காசிமேடு: காசிமேடு பகுதியில், கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக பலியானார்.
காசிமேடு, சிங்காரவேலர் நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கதிரவன், 53; மீனவர். நேற்று முன்தினம், மீன்பிடி தொழிலுக்காக, துறைமுகத்தின் புதிய வார்ப்பு பகுதிக்கு சென்றார். அப்போது, திடீரென கதிரவன் கால் தவறி கடலில் விழுந்தார்.
கடலில் மிதந்து கொண்டிருந்த கதிரவன் உடலை, மீன்பிடி துறைமுக போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
இருவர் மாயம் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா சர்ச்சில், நேற்று முன்தினம் தேர் திருவிழா நடந்தது. இவ்விழாவில் பங்கேற்க, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும், புதுப்பேட்டையைச் சேர்ந்த தமிழ்செல்வன், 22, மணிபாலன், 27, ஆகியோர் சென்றனர்.
தேர் பவனி முடிந்ததும், பெசன்ட் நகர் கடற்கரையில் துாங்கிவிட்டு, நேற்று காலை கடலில் குளித்தனர். அப்போது, தமிழ்செல்வன் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற மணிபாலனும் அலையில் சிக்கினார்.
கடலில் மாயமான இருவரையும், சாஸ்திரி நகர் போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் தேடி வருகின்றனர்.