செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல் உதவி மையங்கள் மூடுவிழா:அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்களால் மக்கள் அச்சம்
மறைமலை நகர்:செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையங்கள் செயல்படாததால், பைக் திருட்டு, நகை, மொபைல் போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, குற்றச்சம்பவங்களை தடுக்க காவல் உதவி மையங்களில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், காவல் கண்காணிப்பு மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் உள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில், 20 காவல் நிலையங்களும், தாம்பரம் போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டில், 25 காவல் நிலையங்களும் உள்ளன.
இவற்றில் கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், ஓட்டேரி, சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு தாலுகா, செங்கல்பட்டு நகர காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், அதிகளவில் குற்றச் சம்பவங்கள் நடக்கும் பகுதிகளாக உள்ளன.


