ரயில் மோதி வாலிபர் பலி
கொருக்குப்பேட்டை:பொன்னேரி ரயில் நிலையம் அருகே, ரயில் மோதி, 23 வயது வாலிபர் பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, இனாம் அகரம் ஜெகநாதபுரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ், 23; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் பொன்னேரி ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே நடந்து சென்றார்.
அப்போது, பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் நோக்கி செல்லும் மின்சார ரயில் ஜெகதீஷ் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
