வீட்டின் மொட்டை மாடியில் நிறுத்தப்பட்ட கார்; திருடர்களுக்கு வந்த சவால்
திருடர்களுக்கு வந்த சவால்பீ ஹார் மாநிலம் கோபால்கஞ்சை சேர்ந்த மனோஜ், வேலைக்காக வெளிநாடு சென்று
பீ ஹார் மாநிலம் கோபால்கஞ்சை சேர்ந்த மனோஜ், வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார். திருட்டு பயம் மிகுந்த ஊரில், வீட்டு வாசலில் நிறுத்தியிருக்கும் ஸ்கார்பியோ வாகனத்தை, எப்படி பாதுகாப்பது என்ற பலத்த யோசனைக்கு பிறகு, குடும்பத்தினர் எடுத்த அந்த முடிவு, குபீர் சிரிப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.
பெரிய மூன்றடுக்கு கிரேனை வரவழைத்த அவர்கள், அலேக் ஆக ஸ்கார்பியோவை துாக்கி, தங்கள் இரண்டு மாடி வீட்டின் மொட்டை மாடியில் நிறுத்தி விட்டனர். அவ்வளவுதான், தீர்ந்தது கவலை. கிரேனில் காரை துாக்கி மொட்டை மாடியில் நிறுத்தும் வீடியோ, இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கே. எப்.சி., நிறுவனத்தின் கிரேட்டர் நொய்டா மேற்கு கிளையில் வாங்கிய, பிரைடு சிக்கனில் புழு இருந்ததாக, எக்ஸ் தளத்தில் வாடிக்கையாளர் ஒருவர் வீடியோவுடன் வெளியிட்ட பதிவு டிரெண்டிங் ஆனது. 'இது மிகவும் மோசம். உங்கள் பிரைடு சிக்கனில் புழு இருந்தது. இது, ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று' என்று அவர் கூறியிருந்தார்.

