கொள்ளிடம்: பிரத்யங்கிரா கோவிலில் அமாவாசை சிறப்பு யாகம்
கொள்ளிடம்,கொள்ளிடம் அருகே பிரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பிரத்யங்கிரா தேவிம
கொள்ளிடம் அருகே பிரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. திருமண தடை, வேலைவாய்ப்பு தடை மற்றும் பல்வேறு காரிய தடைகள் உள்ளிட்ட பல்வேறு தோஷ நிவர்த்திகளுக்காக பக்தர்கள் இக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.
இக்கோவிலில் ஆவணி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

