Religion
ஆவணி மாத அமாவாசை கங்கம்மா தேவிக்கு பூஜை

ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் என்.பி., அக்ர-ஹாரம் ஏரி அருகே, கோகுல் நகர் மும்மூர்த்தி கார்டனில், கங்காதேவி சக்தி பீடத்தில் உள்ள கங்கம்மா தேவி உடனுறை கங்காதரேஸ்வரர் கோவிலில், ஆவணி அமாவாசையை முன்-னிட்டு, நேற்று முன்தினம் இரவு, கங்காதரேஸ்-வரர் மற்றும் கங்கம்மா தேவிக்கு சிறப்பு பூஜை, அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, உலக நன்மை வேண்டி, பிரத்யங்கிரா தேவி மகா யாகம் நடந்தது.
தீய சக்திகள், எதிர்ப்பு, செய்வினை மற்றும் கண்-திருஷ்டி நீங்கவும், தீராத வியாதிகள் தீரவும், மன அமைதி மற்றும் ஆன்மிக பாதுகாப்பு வேண்டியும் நடத்தப்பட்ட யாகத்தில், பிரத்யங்கிரா தேவிக்கு உகந்த காய்ந்த மிளகாய் வத்தல் மற்றும் 108 மூலிகை திரவியங்கள் உள்ளிட்ட யாக பொருட்கள் தீயில் இடப்பட்டு, மகா பூர்ணாஹூதி நடந்தது.
அதன் பின், யாகத்தில் வைத்து பூஜை செய்யப்-பட்ட புனித நீர் அடங்கிய கலச கும்பங்களை தலையில் சுமந்தவாறு, கோவிலை சுற்றி பக்-தர்கள் வலம் வந்தனர். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபி ேஷகம் நடந்தது. பீடாதிபதி குருஜி ரவிச்சந்திரன் மற்றும் ஆச்சார்யா புருஷோத்-தமன் உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.