மாரி செல்வராஜின் மஞ்சணத்தி படப்பிடிப்பு தொடக்கம்!
மஞ்சணத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்...
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் மஞ்சணத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இறுதியாக இயக்கிய பைசன் திரைப்படம் வணிக மற்றும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமானது. தொடர் வெற்றிகளைக் கொடுப்பதால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகவும் மாரி செல்வராஜ் வளர்ந்துள்ளார். அவருக்கான ஓடிடி வணிகமும் பெரிதாகியுள்ளதால், பலரும் மாரி செல்வராஜ் திரைப்படங்களைத் தயாரிக்க முனைப்பு காட்டுகின்றனர்.
தற்போது, மாரி செல்வராஜ் தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான நவ்வி ஸ்டூடியோஸ் மூலம் மஞ்சணத்தி என்கிற திரைப்படத்தை இயக்குகிறார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
