Arts, culture, entertainment and media
“மஞ்சணத்தி கதையின் ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கும் போதும்...” - பிரியங்கா மோகன் விவரிப்பு

இயக்குநர் மாரி செல்வராஜ் பைசன் காளமாடன் படத்தை தொடர்ந்து ‘மஞ்சணத்தி’ படத்தை தொடங்கினார். இப்படத்தை அவரது மனைவி திவ்யா மாரி செல்வராஜ் ‘நவ்வி ஸ்டூடியோஸ்’ மற்றும் ஃபார்சியூன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இளையராஜா இசையமைக்கிறார். இவருடன் மாரி செல்வராஜ் முதல் முறையாக இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஜூனில் சிறு வீடியோவுடன் வெளியானது. அதில் இளையராஜா படத்தின் தலைப்பை கைப்பட எழுதிகொடுத்து வாழ்த்தியிருந்தார்.
இப்படத்தில் நடிகைகள் பிரியங்கா மோகன் மற்றும் கயாடு லோஹர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் பரியேறும் பெருமாள் கதிர், 29 பட நாயகன் விது, நடன அமைப்பாளர் சாண்டி, பூர்ணிமா ரவி ஆகியோரும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு கடந்த 7ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் இணைந்தது குறித்து பிரியங்கா மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சில படங்கள் தொடங்குவதற்கு முன்பே நம் மனதோடு ஒட்டிக்கொள்ளும் ஒரு உணர்வைத் தரும். அது போலத்தான் இந்த மஞ்சணத்தி. இக்கதையின் ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கும் போதும், ஆழமான உணர்வுகளுடனும் உயிரோட்டமுடனும் நிறைந்த ஒரு உலகத்திற்குள் நெருங்கிச் செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டது.
மாரி செல்வராஜுடன் இணைந்து இந்த அழகான பயணத்தில் செல்வது நான் மிகுந்த நன்றியுணர்வுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறேன். உங்கள் உலகத்திற்குள் நுழைய ஆவலாக இருக்கிறேன். மேலும், இளையராஜா அவர்களின் இசை எங்கள் கதைக்கு உயிர் கொடுப்பது இந்தப் பயணத்தை இன்னும் சிறப்பானதாக்குகிறது. இந்த மாயாஜாலப் பயணத்தைத் தொடங்கவும், 'மஞ்சனத்தி'யை உங்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும் ஆவலாகக் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)