கடல்சார் பாதுகாப்பில் புதிய சகாப்தம்: பிரதமர் மோடியின் நடவடிக்கையால் சீனா பெரும் அதிர்ச்சி
சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் அமைப்பாக மகாசாகர் மிஷன் உருவெடுத்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் இலங்கையில், சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி இந்தியாவின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காகச் செயல்படுத்தப்படும் 'மகாசாகர்' (MAHASAGAR) மிஷன் மற்றும் அதன் 5 முக்கிய உத்திகள் குறித்து பார்க்கலாம். மோடியின் இந்த அதிரடி நடவடிக்கை சீனாவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாக பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தியப் பெருங்கடலில் முத்து போன்ற வடிவத்தில் அமைந்துள்ள இலங்கை, சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் மிக முக்கியப் புள்ளியாக விளங்குவதோடு, இந்தியாவின் பாதுகாப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.



