அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை!
தமிழ்நாடு முழுவதும் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததும் சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு பொதுமக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியது. மணிக்கு ஒருமுறை மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் குழந்தைகளும் மாணவர்களும் அவதிப்படுகின்றனர்.
இதே நிலை தான் புதுக்கோட்டை மாவட்டத்திலும் உள்ளது. இன்று (09.09.2026) இரவு 10 மணிக்கு கீரமங்கலம் -பட்டுக்கோட்டை சாலையில் பைக்கிள் சென்ற ஒரு இளைஞர் நகரம் சன்னதி பிரிவு சாலை அருகே போலிசார் வைத்துள்ள பேரிக்கார்டில் மோதிய விபத்தில் காயமடைந்தார். கீரமங்கலம் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். அங்கு மின்தடையால் மின்சாரம் இல்லாததால் செல்போன் வெளிச்சத்தில் காயமடைந்த இளைஞருக்குச் சிகிச்சை அளித்தனர்.
மின்தடையால் மருத்துவமனையில் கூட நோயாளிகளும் பாதிக்கப்பட்டு வருவது பேரதிர்ச்சியாக உள்ளது. மின்வாரிய அதிகாரிகளோ 50 நிமிடங்களுக்கு ஒரு முறை மின்சாரத்தை நிறுத்தி 50 நிமிடம் மின்சாரம் கொடுக்க மேலிருந்து உத்தரவு அதனால் ஒவ்வொரு மின் பாதையாக நிறுத்தி விடுகிறோம் என்கின்றனர்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

