ஆபாசத் துறையை சட்டப்பூர்வமாக்கும் உக்ரைன்? போருக்காக இப்படியொரு திட்டமா?
செய்தியாளர் - M. மீராரஷ்யாவுக்கு எதிரான போர் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், கூடுதல் வருவாயை திரட்ட உக்ரைன் அரசு மேற்கொள்ளும் ஒரு வித்தியாசமான முயற்சி சர்வதேச
ரஷ்யாவுக்கு எதிரான போர் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், கூடுதல் வருவாயை திரட்ட உக்ரைன் அரசு மேற்கொள்ளும் ஒரு வித்தியாசமான முயற்சி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. நாட்டில் தற்போது சட்டவிரோதமாகக் கருதப்படும் ஆபாச உள்ளடக்கத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை சட்டப்பூர்வமாக்கி, அதற்கு வரி விதிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயை போருக்குப் பயன்படுத்தும் திட்டம் குறித்து உக்ரைன் நாடாளுமன்றத்தில் பரிசீலனை நடைபெற்று வருகிறது.
உக்ரைனில் ஆபாசப் படங்களைத் தயாரித்தல் மற்றும் விநியோகித்தல் உள்ளிட்டவை தற்போது குற்றமாகக் கருதப்படுகின்றன. இதற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், ஆன்லைன் தளங்களின் வளர்ச்சியால் இந்தத் தொழில் ரகசியமாக தொடர்ந்து இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, OnlyFans தளத்தைச் சேர்ந்த தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில் சுமார் 7,900 உக்ரேனியர்கள் 131 மில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் அரசுக்கு கணிசமான வரி வருவாய் கிடைக்கக்கூடும் என கருதப்படுகிறது. ஆகையால், இந்தத் துறையைச் சட்டப்பூர்வமாக்கும் மசோதாவை எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் உள்ளிட்டோர் முன்னெடுத்து வருகின்றனர். இதன்மூலம் ஆண்டுக்கு 25 மில்லியன் டாலர் வரை வரி வருவாய் கிடைக்கலாம் என அவர் மதிப்பிட்டுள்ளார். இந்தத் தொகை சுமார் 30,000 ராணுவ ட்ரோன்களை வாங்குவதற்குப் போதுமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.



