தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய பட்டன் ஜெல்லி மீன்கள்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதியில் சில மாதங்களாகதென்மேற்கு பருவக்காற்று வீசினாலும் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் தனுஷ்கோடி தென்கடலான மன்னார் வளைகுடா கடலில் வெப்ப சலனம் நிலவுவதுடன், ராட்சத அலைகளும் எழுகிறது. இந்நிலையில் கடலில் ஏற்பட்ட தட்பவெப்ப மாறுபாட்டால் தனுஷ்கோடி கடலோரத்தில் உணவு தேடி வரும் ஏராளமான பட்டன் ஜெல்லி மீன்கள், தனுஷ்கோடி கடற்கரையில் பல இடங்களில் குவியல் குவியலாக ஒதுங்கியது.
வட்ட வடிவம், வைலட் நிறத்தில் உள்ளதால், இதனை கடல்சார் விஞ்ஞானிகள் பட்டன் ஜெல்லி மீன் என்றழைக்கின்றனர். இம்மீன்களுக்கு விஷத்தன்மை உள்ளதால் தனுஷ்கோடி கடலில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது என மீனவர்கள் தெரிவித்தனர்.



