சி.சி.ஐ., செயல்முறையில் மறுசீரமைப்பு எதிர்பார்ப்பு! தொழில் துறையினர் வலியுறுத்தல்
திருப்பூர்:இந்திய பருத்திக்கழகத்தின் செயல்முறைகளை மறுசீரமைப்பு செய்து, நுாற்பாலைகளுக்கு மட்டுமே பஞ்சு விற்பனை செய்ய வேண்டுமென கட்டாயப்படுத்தினால், நாடு முழுவதும் பஞ்சு - நுால் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என, நுால் வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில், உள்நாட்டு தேவைக்கு அதிகமாகவே பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது; பஞ்சும் உற்பத்தியாகிறது. மத்திய அரசு, பருத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன், இந்திய பருத்திக்கழகத்தை அமைத்துள்ளது. அதேநேரத்தில், உள்நாட்டு பஞ்சு தேவைகளை பூர்த்தி செய்வதும் அதன் தலையாய கடமையாக உள்ளது.
தலைகீழ் மாற்றம் ஏன்?
