கிணறு குடுங்க, ப்ளீஸ்.. விவசாயிகளிடம் கெஞ்சும் ஊராட்சிகள் குப்பை கொட்ட இடம் கிடைக்காமல் தவிப்பு
கோவை: கோவை மாநகராட்சி மட்டும் இல்லீங்க; குப்பை இல்லா ஊராக்குவோம் என்று அறிவிப்பு போர்டு வைத்த அத்தனை ஊராட்சிகளும் விழி பிதுங்கி நிற்கின்றன.: கிராம ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை பெரும் சவாலாக உள்ளது. வீடுகளில் சேகரிக்கும் குப்பை தரம் பிரிக்கப்படாமல், சாலையோரம் குளம் குட்டை புறம்போக்கு நிலங்களில் கொட்டப்படுகிறது.
மயிலம்பட்டி, முதலிபாளையம், குரும்பபாளையம், கரியாம்பாளையம், வெள்ளானைப்பட்டி போன்ற ஊராட்சிகளில் சாலையோர குப்பை குன்றுகள் அதிகம் தென்படுகின்றன. குப்பையை தரம் பிரித்து கொடுக்காத வீடுகளுக்கு அபராதம் விதிப்போம் என்று அறிவித்தும் பலன் இல்லை. நாடெங்கும் அமலுக்கு வந்துவிட்ட புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகள் பற்றி வீதி வீதியாக விழிப்புணர்வு பிரசாரம் செய்தும் நோ யூஸ்.
மக்கும் குப்பை, மக்காத குப்பை என 2 வகையாக குப்பையை பிரித்து தர சொன்னதையே மக்கள் இன்னும் செய்யவில்லை. அதற்குள் 4 வகையாக பிரித்து கொடு என்றால் எப்படி ஏற்பார்கள்?
