காஞ்சிபுரத்தில் 15ம் நூற்றாண்டு சதிக்கல் சிற்பம் கண்டெடுப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி கிராமத்தில், 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சதிக்கல் சிற்பம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி கிராமத்தில், வரலாற்று ஆய்வாளரும், சென்னை துாய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியருமான அன்பழகன் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது புத்தேரி சாலையோரம் சதிக்கல் சிற்பம் ஒன்றை கண்டறிந்தார்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் மற்றும் உதவி பேராசிரியர் அன்பழகன் கூறியதாவது:


