மாநில குத்துச்சண்டை போட்டியில் முதுகுளத்துார் மாணவர்கள் சாதனை
முதுகுளத்துார்:நாமக்கல்லில் நடந்த மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் முதுகுளத்துாரைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு வெள்ளி, 3 வெண்கலம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நாமக்கல்லில் நடந்தது. இதில் முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் செல்வகணேஷ் 17 வயதுக்குட்பட்ட 51 முதல் 54 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கம், யுவதில்லை ராஜன் 17 வயதுக்குட்பட்ட 46 முதல் 48 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம், லத்திகாகரன் 19 வயதுக்குட்பட்ட 51 முதல் 54 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம், கண்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி நித்திலா 14 வயதுக்குட்பட்ட 42 முதல் 44 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் கமால்பாட்சா, முகமது உசேன், தமிமுன் அன்சாரி, தாளாளர் ஜஹாங்கீர்,கல்வி குழு தலைவர் காஜா நஜ்முதீன், தலைமையாசிரியர் காஜா நிஜாமுதீன் குரைசி மற்றும் கண்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் காந்திராசு, முதல்வர் அடலின் லீமா, டைகர் பாக்சிங் இன்ஸ்டிட்யூட் பயிற்சியாளர் பாஸ்கரன் பாராட்டினர்.




