விருதை - சேலம் சாலை விரிவாக்க பணியில் அலட்சியம்: பராமரிப்பு இல்லாததால் விபத்து அபாயம்
வேப்பூர்:விருத்தாசலம்- - சேலம் சாலையில் விரிவாக்க பணிகள் அலட்சியமாக நடந்த நிலையில், பராமரிப்பு பணிகளும் இல்லாததால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
கடலூர் பச்சையாங்குப்பம் - விருத்தாசலம் சேலம் (சின்னசேலம் கூ ட்ரோடு) வரையிலான 111 கி.மீ., தூர மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக (சி.வி.எஸ்.,சாலை), கடந்த 2015ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, 2021--2022ம் ஆண்டில், கடலூர் பச்சையாங்குப்பம் - - விருத்தாசலம் வரை; விருத்தாசலம் - - சின்னசேலம் கூட்ரோடு வரை 2 கட்டமாக பணிகள் நடந்தது.
இந்நிலையில், கடலூர்- - விருத்தாசலம் இடையே வாகன போக்குவ ரத்து அதிகரித்ததால் விபத்துகளும் அதிகரித்தன. அதனைத் தொடர்ந்து விபத்துகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து, கடலூர்-விருத்தாசலம் இடையேயான சாலை ரூ. 225 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது.



