விருதை - சேலம் சாலை விரிவாக்க பணியில் அலட்சியம்: பராமரிப்பு இல்லாததால் விபத்து அபாயம்

வேப்பூர்:விருத்தாசலம்- - சேலம் சாலையில் விரிவாக்க பணிகள் அலட்சியமாக நடந்த நிலையில், பராமரிப்பு பணிகளும் இல்லாததால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
கடலூர் பச்சையாங்குப்பம் - விருத்தாசலம் சேலம் (சின்னசேலம் கூ ட்ரோடு) வரையிலான 111 கி.மீ., தூர மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக (சி.வி.எஸ்.,சாலை), கடந்த 2015ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, 2021--2022ம் ஆண்டில், கடலூர் பச்சையாங்குப்பம் - - விருத்தாசலம் வரை; விருத்தாசலம் - - சின்னசேலம் கூட்ரோடு வரை 2 கட்டமாக பணிகள் நடந்தது.
இந்நிலையில், கடலூர்- - விருத்தாசலம் இடையே வாகன போக்குவ ரத்து அதிகரித்ததால் விபத்துகளும் அதிகரித்தன. அதனைத் தொடர்ந்து விபத்துகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து, கடலூர்-விருத்தாசலம் இடையேயான சாலை ரூ. 225 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது.
தொழிற்துறையின் போக்குவரத்து இதன்வழியே சேலம், தர்மபுரி, ஒசூர், சிதம்பரம், கும்பகோணம், ஆத்தூர், கோயம்புத்துார், ஈரோடு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மேலும், கடலூர் துறைமுகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு மீன்களை கொண்டு செல்லவும், ஆத்தூர், ராசிபுரம் பகுதி சேகோ மற்றும் அரிசி ஆலைகள், சவுக்கு கட்டைகள் கொண்டு செல்வதால், தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகனங்களின் முக்கிய போக்குவரத்து வழியாக உள்ளது.
அதிகாரிகள் அலட்சியம் விருத்தாசலம்- -சேலம் சாலை இடையே கண்டப்பங்குறிச்சி, திருப்பயர், என்.நாரையூர், அ.களத்தூர், காஞ்சிராங்குளம் உள்ளிட்ட இடங்க ள் அதிக விபத்துகள் ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டன. இதை தடுக்கும் வகையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டி, ஜல்லிகள் கொட்டப்பட்டது. மேலும், கிராம சாலைகள் தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் இடத்தில் 'ரப்பர்' வேகத்தடை அமைக்கப்பட்டது.
மேற்கொண்டு, ஜல்லிகள் கொட்டிய இடத்தில் தார்சாலை அமைக்காமலு ம், சாலையின் இருபுறமுள்ள கம்பங்கள், எச்சரிக்கை பலகைகள், மரங்களை அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் பழுதடைவது, பைக் விபத்துகள் தினசரி நடக்கிறது.
பராமரிப்பு இல்லை விருத் தாசலம்- - சேலம் சாலையில் கண்டப்பங்குறிச்சி, வேப்பூர் கூட்டுரோடு, விளம்பாவூர், அடரி, மாங்குளம், சிறுபாக்கம் பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இங்கு, சாலையையொட்டி புளிய மரங்கள் அதிகளவில் உள்ளதுடன், இதனை வாக ன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் விதமாக மரங்களில் பிரதிபலிப்பான்களும், கருப்பு மற்றும் வெள்ளை வர்ணமும் பூசப்பட்டாமல் உள்ளது.
மேலும், வேப்பூர் கூட்டுரோட்டில் உள்ள வேகத்தடைகள் மீது வெள்ளை வர்ணம் பூசவில்லை.
பெரியநெசலூரில் சாலையின் ஒருபுறம் உள்வாங்கியதை சீரமைக்காததால், அவ்வழியே வேகமாக வரும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகிறது.
எனவே, விருத்தாசலம்- - சின்னசேலம் கூட்டுரோடு சாலையில் விரிவாக்க பணிகளை முழுமையாக செய்து, சாலையோர புளிய மரங்களில் பிரதிபலிப்பான்களும், வர்ணமும் பூச தேசிய நெடுஞ்சாலையினர் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.