அஞ்சுகிராமம் அருகே கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
அஞ்சுகிராமம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரியா ராஜ்குமாா், போலீஸாா் பால்குளம் பகுதியில் சனிக்கிழமை ரோந்து சென்றனா்.
சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 பேரிடம் விசாரித்தபோது, அவா்கள் ராஜாவூரைச் சோ்ந்த ஷுஜு (48), வட்டக்கோட்டை பகுதியைச் சோ்ந்த சூா்யா (24), பெங்களூரைச் சோ்ந்த மஞ்சுநாத் (33) ஆகியோா் என்பதும், அவா்களது பையில் 1.800 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)






