கஞ்சா விற்ற 4 பேர் கைது
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்,.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல் சிறுவலுாரில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், நேற்று வடபொன்பரப்பி இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் கஞ்சா விற்ற மணலுார் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் விக்னேஷ், 21; வரதராஜ் மகன் ஆகாஷ், 21; மேல் சிறுவலுார் ஏழுமலை மகன் உதயநிதி, 20; மைக்கேல்புரம் ஆதி மகன் டேனியல், 21; ஆகிய 4 பேரை கைது செய்து, 200 கிராம் கஞ்சா மற்றும் 3 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.