கொலை வழக்கில் ஒருவர் கைது
சூலூர்: பாப்பம்பட்டியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சூலூர் அடுத்த பாப்பம்பட்டி நந்தினி நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில், கடந்த 7ம் தேதி, கொலை செய்யப்பட்ட வாலிபரின் சடலம் மீட்கப்பட்டது. அவர் யார் எனத் தெரியவில்லை.
சூலூர் போலீசார் விசாரணையில் கொலையுண்ட நபர், நேபாளத்தைச் சேர்ந்த ராமேஸ்வர் ஷா என்பதும், பாப்பம்பட்டியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்ததும் தெரியவந்தது.
