ஆண்டாள் கோயில் அறங்காவலர் பதவி 150க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
ஸ்ரீவில்லிபுத்துார், செப். 7 - ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் அறங்காவலர்கள் பதவிக்கு 150க்கும்
தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கீழ் 43 ஆயிரத்து 723 கோயில்கள் உள்ள நிலையில் பிரசித்தி பெற்ற மற்றும் அதிக வருவாய் உடைய 214 கோயில்களில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை நியமிக்க தற்போதைய தமிழக அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஜூன் மாதம் வெளியிட்டது.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், வைத்தியநாதர், ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி, திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள், சிவகாசி விஸ்வநாதர் கோயில்களுக்கு அறங்காவலர் நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
முதலில் ஜூலை 22க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

