தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவராக வழக்குரைஞர் கே. கதிரவன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக, தேர்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு மொத்தம் உள்ள 25 உறுப்பினர்களில் 2 நியமன பெண் உறுப்பினர்கள் தவிர எஞ்சிய 23 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மார்ச் 30-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 143 வழக்குரைஞர்கள் போட்டியிட்டனர். இதில் பார் கவுன்சில் முன்னாள் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் உள்ளிட்ட 23 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பார் கவுன்சிலுக்கு பெண் நியமன உறுப்பினர்களாக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.எம். வேலுமணி மற்றும் வழக்குரைஞர் சுதர்சனா சுந்தர் ஆகியோரை நியமித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி உத்தரவிட்டிருந்தார்.



