பார் கவுன்சில் தலைவர் போட்டியின்றி தேர்வு

சென்னை : தமிழக, புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு, மொத்தம் உள்ள 25 உறுப்பினர்களில், இரண்டு நியமன பெண் உறுப்பினர்கள் தவிர, எஞ்சிய 23 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மார்ச் 30ல் நடந்தது. போட்டியிட்ட 143 வழக்கறிஞர்களில், 23 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், நேற்று நடந்தது. தலைவராக வழக்கறிஞர் கே.கதிரவன், துணை தலைவராக இ.பாலமுருகன், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக பி.எஸ்.அமல்ராஜ் ஆகியோர், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் என, தேர்தல் அதிகாரியான சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா அறிவித்தார்.