கடன் பாக்கிய கேட்ட விடுதி உரிமையாளரை கடத்தி நகை, பணத்தை பறித்த பெண் உட்பட 4 பேருக்கு வலை
புதுச்சேரி: கடனை கேட்ட விடுதி உரிமையாளரை கடத்தி சென்று நகை, பணம் பறித்த பெண் உட்பட 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரி கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் மனோகர், 35; இவர் மூலக்குளத்தில் லீஸ் மூலம் கெஸ்ட் ஹவுஸ் நடத்தி வருகிறார். இவரிடம் உப்பளத்தை சேர்ந்த பாண்டியன் மனைவி ரேவதி என்பவர் 50 ஆயிரம் ரூபாய் பணம் கடனாக வாங்கியிருந்தார். அதிலிருந்து 30 ஆயிரம் ரூபாயை ரேவதி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கடன் பாக்கி 20 ஆயிரம் ரூபாயை அவரிடம் மனோகர் கேட்டார். மேட்டுப்பாளையம் கனரக வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு வந்து பணத்தை வாங்கி கொள்ளுங்கள் என ரேவதி கூறினார். கடந்த 4ம் தேதி, அங்கு சென்று காத்திருந்த மனோகரை, டாட்டா ஏ.சி., வாகனத்தை ஓட்டி வந்தவர் அவரை கடத்தி சென்று திண்டிவனம் சாலை டோல்கேட் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தினார்.

