தேசிய நெடுஞ்சாலையில் ‘பேரிகேட்’கள் வாகன ஓட்டிகள் ‘திக்... திக்...’ பயணம்
திருமழிசை: சென்னை – பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள ‘பேரிகேட்’களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்துவதற்கான சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நெடுஞ்சாலை வழியே, தற்போது ஒரு லட்சத்திற்கு அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், இந்த நெடுஞ்சாலையில் திருமழிசை, செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம், பாப்பன்சத்திரம், செட்டிபேடு, தண்டலம் உட்பட பல இடங்களில், பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் ‘பேரிகேட்’ வைத்து தடுப்புகள் அமைத்துள்ளனர்.


