கொடைக்கானல் இளைஞா் வெட்டிக் கொலை
மதுரை அருகே கொடைக்கானல் இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்டாா்.
மதுரை மாவட்டம், சிலைமான் பெரியாா்நகா் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் இளைஞா் உயிரிழந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், சிலைமான் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், உயிரிழந்த நபா் திண்டுக்கல் மாவட்டம்,கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த தெய்வேந்திரன் (28) எனத் தெரியவந்தது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)




