பாய்ஸ் கம்பெனி மாதா ஆலயம் திருவிழா கோலாகலம்
குன்னுார்: குன்னுார் பாய்ஸ் கம்பெனி மாதா ஆலய தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.
குன்னுார் பாய்ஸ்கம்பெனி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில், கடந்த மாதம், 29ல் கொடியேற்றத்துடன் மாதா திருவிழா துவங்கியது. தினமும் நவநாள் திருப்பலி, ஜெபம் நடந்தன.
நேற்று ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில், ஆலய பங்கு குரு ஆரோக்கிய ராஜ் உட்பட குருக்கள் முன்னிலையில், கூட்டு திருப்பலி, மறையுரை நடந்தன. பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற பெண் குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டதுடன், கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மதியம் அன்பின் விருந்து நடந்தது.
