தாமரை வண்ண அலங்காரத்தில் மாதா தேர் பவனி
குன்னுார்: குன்னுார் பாய்ஸ் கம்பெனி, வேளாங்கண்ணி திருத்தல திருவிழாவில் தாமரை வண்ண விளக்குகள் அலங்காரத்தில் மாதா தேர் பவனி நடந்தது.
குன்னுார் பாய்ஸ்கம்பெனி புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நடப்பாண்டு ஒரு வாரமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு குன்னுார் மறைமாவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி, மறையுரை நடந்தது. தொடர்ந்து நடந்த விழாவில், வேளாங்கண்ணி மாதா, தாமரை வண்ண விளக்குகள் அலங்காரத்தில் பவனி வந்தார். ஏராளமான பங்கு மக்கள் தேர் பவனியில், மெழுகுவர்த்தி ஏந்தி மாதாவின் பிரார்த்தனையுடன், ஊர்வலத்தில் பங்கேற்றனர். முடிவில், ஆலய வளாகத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.