Krishna Jayanthi | நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்.!
கிருஷ்ணர் அவதரித்த இடமாக கருதப்படும் மதுராவில் உள்ள கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கிருஷ்ணஜெயந்தியை ஒட்டி, உத்தரபிரதேச மாநிலத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ பாங்கே பிஹாரி கோயிலில் நடைபெற்ற மங்கள ஆரத்தியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், புரி கடற்கரையில் 101 பானைகளை கொண்டு மிக நேர்த்தியாக கிருஷ்ணரின் மணல் சிற்பத்தை உருவாக்கியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.


