Religion
Krishna Jayanthi | நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்.!
கிருஷ்ணர் அவதரித்த இடமாக கருதப்படும் மதுராவில் உள்ள கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.

கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கிருஷ்ணஜெயந்தியை ஒட்டி, உத்தரபிரதேச மாநிலத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ பாங்கே பிஹாரி கோயிலில் நடைபெற்ற மங்கள ஆரத்தியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், புரி கடற்கரையில் 101 பானைகளை கொண்டு மிக நேர்த்தியாக கிருஷ்ணரின் மணல் சிற்பத்தை உருவாக்கியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
#WATCH | Uttar Pradesh: Devotees gather at Shri Banke Bihari Ji Mandir, Vrindavan for Janmashtami aarti. pic.twitter.com/fHezOQrFQZ
கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி, டெல்லியில் உள்ள புகழ்பெற்ற இஸ்கான் கோயில் வண்ணமயமான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணர் அவதரித்த இடமாக கருதப்படும் மதுராவில் உள்ள கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுராவில் குவிந்து வருவதால், ஒட்டுமொத்த நகரமுமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
