ஆதரவற்ற மகளிர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
எருமப்பட்டி; நாமக்கல் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் ஆதரவற்ற மகளில் நல வாரியத்திற்காக, உறுப்பினர் சேர்க்கை முகாம், யூனியன் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நல வாரியத்தில் கணவரால் கைவிடப்பட்டவர்கள், முதிர் கண்ணிகள் மற்றும் ஆதரவற்ற மகளிர் ஆகியோரை உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு வருகின்றனர். நேற்று, எருமப்பட்டி யூனியனில் இந்த மகளிர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. 400க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மகளிர் கலந்து கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்தனர்.இதேபோல், மாவட்டம் முழுவதும் யூனியன் வாரியாக, 50 வயதிற்குட்பட்ட ஆதரவற்ற மகளிர் நல வாரியத்திற்கான உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


