நல வாரியத்தில் உறுப்பினராக வரும் 15ல் சிறப்பு முகாம்
கோவை: கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர், நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் சிறப்பு முகாம் வரும் 15ல் நடக்கிறது.
காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை கலெக்டர் அலுவலகம், 12 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மேட்டுப்பாளையம், வால்பாறை நகராட்சி அலுவலகங்கள் மற்றும் கோவை மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களில் முகாம் நடக்கிறது. சுகாதாரத்துறையுடன் இணைந்து உடல்நல ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
முகாமில் உறுப்பினராக பதிவு செய்ய விரும்புவோர் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, விதவை அல்லது கணவரால் கைவிடப்பட்டதற்கான சான்று, வருமானம், இருப்பிட சான்று மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் பங்கேற்கலாம்.
உறுப்பினர்களாக பதிவு செய்வோர் தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ஓய்வூதியம், தற்காலிக தங்குமிடம், திறன் வளர்ப்பு பயிற்சி, சுயதொழில் மானியம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பெறலாம்.