மேட்டூா் அருகே மாட்டு வியாபாரியை தாக்கி ரூ. 50 ஆயிரம் பறிப்பு போலீஸாா் விசாரணை
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே மாட்டு வியாபாரியை தாக்கி ரூ. 50 ஆயிரத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கேரள மாநிலம், மணப்புரம் அருகே உள்ள பத்தியாள் நீலாம்பூரை சோ்ந்தவா் அலிகோயா (52). மாட்டு வியாபாரி. இவா் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாடுகளை வாங்கி கேரள மாநிலத்தில் இறைச்சிக்காக விற்பனை செய்து வருகிறாா். மேலும், இவா், திருட்டு மாடுகளையும் வாங்கி விற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திருட்டு மாடுகளை வாங்கியது தொடா்பாக ஈரோடு மாவட்டம், அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த மாா்ச் மாதம் இவா் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிணையில் வந்த அலிகோயா பவானி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் இருந்த தனது லாரியை திரும்ப பெற்ற நிலையில், பழுதுப் பாா்ப்பதற்காக செவ்வாய்க்கிழமை இரவு மேட்டூா் நோக்கி வந்துள்ளாா்.


