மாடு திருடிய வழக்கில் சிக்கிய கேரள டிரைவரை தாக்கிய கும்பல்
மேட்டூர்: கேரள மாநிலம் நீலாம்பூரை சேர்ந்த, லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் அலி, 51. அவர் மீது ஈரோடு மாவட்டம் அம்மா-பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கடந்த மார்ச், 24ல் மாடு திரு-டிய வழக்கு உள்ளது. அந்த வழக்கில் சிறையில் இருந்த அவர், ஒரு மாதத்துக்கு முன் ஜாமினில் வந்தார். தொடர்ந்து பவானி நீதி-மன்றத்தில் உத்தரவு பெற்று, அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் இருந்த, அவரது லாரியை எடுத்துக்கொண்டு, பழு-துபார்க்க விடுவதற்காக, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு மேட்டூர்
ஓட்டிச்சென்றார்.
நவப்பட்டி, நாட்டாமங்கலம் அருகே வந்தபோது, பைக்கில் வந்த இருவர், லாரியை மறித்து டிரைவர் அலியை இறக்கி அடித்து உதைத்தனர். பின் அவரை பைக்கில் ஏற்றி மாதையன்-குட்டை தகனமேடை அழைத்துச்சென்றனர். அங்கு ஏற்கனவே இருந்த இருவர், அலியை மீண்டும் தாக்கினர்.படுகாயம் அடைந்த அலி, மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாட்டாமங்கலத்தில் நின்றிருந்த லாரியை மேட்டூர் போலீசார், ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து, 4 பேர் கும்பலை தேடுகின்றனர்.