கேரளாவில் பருவ மழை குறைவால் வறட்சி அபாயம்
மூணாறு, செப்.6- கேரளாவில் தென் மேற்கு பருவ மழை குறைவால் வறட்சி அபாயம் ஏற்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் ஆண்டு
கேரளாவில் தென் மேற்கு பருவ மழை குறைவால் வறட்சி அபாயம் ஏற்பட்டுள்ளது.
இம்மாநிலத்தில் ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ மழை நன்கு கை கொடுக்கும் என்பதால் முடிந்தவரை வறட்சி பாதிப்பு ஏற்படுவதில்லை. இந்தாண்டு காலநிலை மாற்றத்தால் மழை குறையும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் ஆகஸ்ட் இறுதி வரையிலான கால அளவில் 22 சதவீதம் குறைவு என தெரியவந்தது. இதே கால அளவில் 2024,2025 ஆண்டுகளில் 13 சதவீதம் குறைவாகும். பருவ மழை குறைவால் மாநிலத்தில் வறட்சி அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது வறட்சி அவசர நிலை இல்லை என்றபோதும், மழை குறையும் பட்சத்தில் அவசர நிலையை அமல் படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

