வல்லப்பாக்கம் சிப்காட் திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறதா? சிப்காட் இணையதள தகவலால் குழப்பம்
காஞ்சிபுரம்: வல்லப்பாக்கம் சிப்காட் திட்டம் கைவிடப்பட்டதாக, விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவித்த நிலையில், சிப்காட் இணையதளத்தில் அடுத் து வரும் சிப்காட் திட்டம் பட்டியலில், வல்லப்பாக்கம் இடம் பெற்றிருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே வல்லப்பாக்கம் கிராமத்தில், 120 ஏக்கர் பரப்பளவில், புதிதாக சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க 2021ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதை தொடர்ந்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு, விவசாயிகளுடன் பேச்சு நடத்தி, நில எடுப்புக்கான அதிகாரிகள் நியமனம் செய்வது என, பல்வேறு பணிகளை சிப்காட் நிறுவனம் மேற்கொண்டு வந்தது.


