டி.என்.பி.எல்., ஆலையில் வருமான வரி விழிப்புணர்வு
கரூர்:புகழூர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில், வருமான வரித்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிறுவனத்தின் பொது மேலாளர் மகேஷ் தலைமை வகித்தார். திருச்சி கூடுதல் வருமான வரி ஆணையர் ராஜராஜேஸ்வரி சிறப்பாளராக பங்கேற்றார். புதிய வருமான வரி சட்டம், 2025ல் சம்பளதாரர்களின் வரி முறைகள், கழிவு, விலக்குகள் சரியாக இருக்க வேண்டும். பணியாளர்கள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்காக, கவனமாக சரிபார்க்க வேண்டும். தவறான அல்லது ஆதாரமற்ற வரி கழிவுகள் மற்றும் ரீபண்ட் கோரிக்கைகளால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும், வருமான வரித்துறை வழங்கும் பல்வேறு வரி செலுத்துவோர் நட்பு சேவை மற்றும் தன்னார்வ இணக்க வசதிகள் குறித்தும், விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.


