பொது – தடுப்பில் மோதி பைக் விபத்து ‘ஏசி’ மெக்கானிக் பரிதாப பலி
பட்டினப்பாக்கம்: பட்டினப்பாக்கத்தில், சாலை தடுப்பில் மோதி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில், அஜித், 21, என்ற ‘ஏசி’ மெக்கானிக், சம்பவ இடத்திலேயே பலியானார்.
மயிலாப்பூர், சண்முகம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் அஜித், 21; ‘ஏசி’ மெக்கானிக். தன் நண்பரான மஜீத், 18, என்பவருடன், பட்டினப்பாக்கம் கடற்கரையில், நேற்று முன்தினம் இரவு மது அருந்தினார்.
பின், இருவரும் ‘கே.டி.எம்., டியூக்’ இருசக்கர வாகனத்தில் டி.ஜி.எஸ்., தினகரன் சாலை வழியாக அடையாறு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
